சிவகார்த்திகேயன் நடிப்பில் சபீபத்தில் வெளியாகிய ரெமோ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் பெயரிட படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தங்கள் படத்தில் நடிப்பதக கூறி விட்டு ஏமாற்றி விட்டார் என மூன்று தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு உதவுவதாக கூறி விஷால் இதில் தலையிட இப்போது இந்த பிரச்சனை சிவகார்த்திகேயனுக்கு விபரீதமாக மாரி பிரச்சனை பெரிதாகி இருக்கிறதாம்.

சில தயாரிப்பாளர்கள் விஷால் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இப்பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும் என்று சிவகார்த்திகேயனிடம் கூறிவருகிறார்களாம். இதனால் உதவிக்கு வந்தவனே இப்படி உபத்திரமாக மாறிவிட்டானே என குழப்பத்தில் இருக்கிறாராம் சிவா .