நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிஸ்டர்  லோக்கல் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகும் SK 16 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அணு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும்  பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு வெற்றி பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக, பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ் நடித்து வரும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.  

'நெஞ்சம் முண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என எம்ஜிஆரின் பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்த சிவகார்த்திகேயன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  ஜூன் 14-ம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.