சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  'சீமராஜா' திரைப்படம் தோல்வியை தழுவினாலும், இவர் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது, சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ், எம்.ரவிக்குமார், மற்றும் மித்ரன் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். 

இரண்டு படங்களுக்கு இதுவரை பெயர் வைக்கப்படாத நிலையில்... ராஜேஷ், இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு,  'மிஸ்டர் லோக்கல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் யூடியூபில் புகழ்பெற்ற எருமைச்சாணி ஹரிஜா, சிவகார்த்திகேயனின் தங்கை கேரக்டரை ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எருமைச்சாணி ஹரிஜா ஏற்கனவே அதர்வா நடித்து வரும் '100' மற்றும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.