sivakarthikeyan open talk political and dhanush issue
நடிகர் சிவகார்த்திகேயன்,குறுகிய காலத்திலேயே சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகர் என்கிற உயரத்தை அடைந்தவர். தற்போது இவரிடம் கதை சொல்லவும், இவருடைய படத்தை தயாரிக்கவும் பலர் போட்டிபோடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் நயன்தாராவுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன் ' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து பேசிய சிவா... முதல் முறையாக சமுதாய அக்கரைக்கொண்ட இந்த படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது என்றும் கண்டிப்பாக இந்தப்படம் தனி ஒருவன் போல் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்று கூறினார்.

மேலும் நயன்தாரா இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார், ஒரு ஆணுக்கு பின் எப்படி தைரியமான பெண்ணாக இருக்க முடியும் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக பிரதிபலித்துள்ளதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்கள்... நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து இவரிடம் கேட்டதற்கு, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் தனி மனித உரிமை. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறினார். தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பியதற்கு அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் யோசிக்க வில்லை என தெரிவித்தார்.

மேலும் பல நாட்களாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் சண்டை இருப்பதாக கூறபடுவது பற்றி கேள்வி எழுப்பியதற்கு, தனக்கும் தனுஷுக்கும் எந்த சண்டையும் இல்லை எப்போதும் போல் நண்பர்கள் தான் என கூறினார்.
