ரெமோ படத்தின் வெற்றிவிழாவின் போது சிவகார்த்திகேயனின் அழுகை பலரையும் உலுக்கியது.

பல பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

தொடர்ந்து எதிர்பாராது வந்த சூப்பர்ஸ்டாரின் போன் கால் அவரை ரிலாக்ஸ் ஆக்கியது.

தற்போது மோகன் ராஜாவின் இயக்கத்தில் நயன்தாரா உடன் ஜோடி சேர உள்ள சிவாகார்த்திகேயன், காக்கி சட்டையுடன் சட்டத்தை கையிலெடுக்கிறாராம் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது இந்த படமும் அந்தவரிசையில் வரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.

அந்த படத்தில் தன் தம்பி ஜெயம் ரவியை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்தது போல சிவகார்த்திகேயனையும் போலீஸ்சாக நடிக்க வைக்கிறார் இயக்குனர்.

தனி ஒருவன் சாயல் இதில் இருக்குமா இல்லை தனித்து நிற்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.