Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படத்திற்கு இப்படி ஒரு லோக்கலான டைட்டிலா?

'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
 

sivakarthikeyan nayanthara movie name leaked
Author
Chennai, First Published Jan 29, 2019, 5:28 PM IST

'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடொக்சன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. 

sivakarthikeyan nayanthara movie name leaked

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்,  டீசர் குறித்த அறிவிப்பு வெளியிடுவது குறித்து படக்குழுவினர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது 'மிஸ்டர் லோக்கல்' என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் யோசித்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan nayanthara movie name leaked

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios