சிவகார்த்திகேயன் 'கனா' படத்திற்கு பின்பு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'நம்ம வீட்டு பிள்ளை". அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருமாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் பாரதிராஜா, யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி,  ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "எங்க அண்ணே" முதல் லிரிகள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த அளவிற்கு பாசம் மிகுந்த அண்ணன் தங்கையாக 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ளனர் என்பது இந்த பாடல் மூலமே தெரிகிறது.

வா... வா... டியரு பிரதரு என தொடங்கும் பாடலின் வீடியோ இதோ...