இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் திரைப்படம் Mr . லோக்கல். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே, ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஒரு கருப்பு நிற கோட் சூட் போட்டுக்கொண்டு, சோபாவில், கால் வைத்து கொண்டு செம ஸ்டைல்லாக அமர்ந்துள்ளார். அவருடைய கையில் லோக்கல் டீ -யும் உள்ளது. தற்போது இந்த போஸ்டர் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. 

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.