Maaveeran Trailer : நீருக்கடியில் கொதிக்கும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் ட்ரைலர் தேதி அறிவிப்பு
யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் பாராட்டப்பட "மண்டேலா" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் தான் மடோன் அஸ்வின்
கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனின் சில திரைப்படங்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் வசூல் செய்யாத நிலையில் தற்பொழுது அவர் நடித்துவரும் கதைகளை மிக உன்னிப்பாக கவனித்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள "மாவீரன்" என்ற திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான யோகி பாபுவின் "மண்டேலா" என்ற திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனர் தான் மடோன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த "மாவீரன்" திரைப்படத்தில் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஒரு காமிக் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடன் இணைந்து பணியாற்றும் பெண்ணாகவும், கதையின் நாயகியாகவும் அதிதி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் பல ஆண்டுகள் கழித்து, மூத்த நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தாயாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கழண்டு விழும் ஓவர் கோட்... கண்டுகொள்ளாத ஸ்ருதி ஹாசன்!
சில தினங்களுக்கு முன்பு இந்த படக்குழு வெளியிட்ட ஒரு தகவலின் படி, தளபதி படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டிருக்கும் சில ஆடைகளை போல சிவகார்த்திகேயனுக்கு Costume அளிக்கப்பட்டுள்ளதாகவும். நாம் அனைவரும் விரும்பி பார்க்கும் ஜாக்கிசானின் சண்டைக் காட்சிகளை போல இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்தது.
இது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து, இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஜூலை மாதம் இரண்டாம் தேதி மாவீரன் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. நீருக்கு அடியில் கொதித்து கத்தும் சிவகார்த்திகேயனின் அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள் : எனக்கு அல்வா கொடுத்துட்டு... தொழிலதிபருடன் ரூமுக்கு போயிடுச்சு - பயில்வானுக்கே பயம் காட்டிய நடிகை