அப்படி போடு வெடிய... தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்..!!
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.
அவ்வப்போது இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்க உள்ள தகவல் சமீபத்தில் வெளியானது. மேலும் பல மலையாள படங்களில், நடித்து பிரபலமான நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ என்பவரும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.
அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் 'பீஸ்ட்' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகராக இல்லாமல், ஒரு பாடலை அவரே எழுதி பாடவும் உள்ளாராம். ஏற்கனவே இதே போல்... அவர் நடித்த சில படங்களில் பாடல் எழுதி, பாடியதை தொடர்ந்து முதல் முறையாக அனிரூத் கேட்டு கொண்டதால் இந்த படத்தில் பாட சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளாராம். தற்போது சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.