சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், வறுமையின் காரணமாக படிப்பை தொடரமுடியாமல் தவித்த பேராவூரணியை சேர்ந்த மாணவி சஹானாவின் படிப்பு செலவு மொத்தத்தையும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளது, அனைவருடைய பாராட்டையும் பெற்றுவருகிறது.

கஜா புயலின் கோராதாண்டவத்தில், அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று, தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த மாணவி சஹானா, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில், 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண் எடுத்திருந்தார்.

தேர்வு சமயத்தில் மின்சாரம் கூட இல்லாமல் இவர் இத்தனை, மதிப்பெண்கள் எடுத்தது, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது. 

ஆனால் அதிக மதிப்பெண் எடுத்தும் வறுமையின் காரணமாக சஹானாவால் மேற்படிப்பை தொடர முடியாத நிலை உள்ளதாக, இவரின் உறவினர்கள் கூறினார்.

இதை தொடர்ந்து சஹானாவின் படிப்பு செலவை தாங்கள் ஏற்று கொள்வதாக பலர் உதவி கரம் நீட்டி வருகிறார்கள். 

இந்த செய்து எப்படியோ, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வர, அவர் மாணவி சஹானா...  மருத்துவம் உட்பட எந்த படிப்பு படிக்க ஆசை பட்டாலும் அந்த படிப்பின் முழு செலவையும் தான் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.