சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு உதவிய படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஒன்று. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என சிவகார்த்திகேயனை குத்திக்காட்டியுள்ளார். 

Scroll to load tweet…