பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்... தொடர்ந்து கிராமிய பாடல்களை பாடி அனைத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மனதை கவர்ந்து வரும் தம்பதிகள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் இதே தொலைகாட்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தன்னுடைய திறமையால் தொகுப்பாளராக மாறி பின் வெள்ளித்திரையில் கால் பதித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடைக்கு சிவா வந்தபோது... செந்தில் - ராஜலட்சுமி ஜோடிகள் பாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பாடி முடித்ததும் ராஜலட்சுமிக்கு வீர தமிழச்சி என்று பட்டம் கொடுத்தார் சிவகார்த்திகேயன். இவரிடம் இருந்து இப்படி ஒரு பட்டம் கிடைத்ததால் நெகிழ்ந்து போனார் ராஜலட்சுமி. 

பின் சிவகார்த்திகேயனுக்காக, செந்தில் கணேஷ், சிவா நடித்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'வருத்தப்படாத வாலிபர்' சங்கம் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.