"நம்ம வீட்டு பிள்ளை" வெற்றியைத் தொடர்ந்து, இரும்புத்திரை புகழ் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் "ஹீரோ" படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் நடிக்கவிருந்த "டாக்டர்" என்ற படத்தின் தலைப்பில் சத்தமே இல்லாமல் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். 

"ஹீரோ" படத்தை தயாரித்த கே.ஜி.ஆர்.பிலிம்ஸ் உடன் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து "டாக்டர்" படத்தை தயாரிக்க உள்ளது. "ரெமோ" படத்தை தொடர்ந்து, "டாக்டர்" படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். அனிரூத்தின் அதிரடி இசையில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர், சிறிது நேரத்திலேயே இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.இந்தப்படத்தை "கோலமாவு கோகிலா" பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். 

 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த "டாக்டர்" படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடந்த பூஜையில் சிவகார்த்திகேயன், ஹீரோயின் பிரியங்கா மோகன், யோகிபாபு, இளவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வினய் களம் இறங்குகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூஜை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் எஸ்.கே. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக டாக்டர் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் கோவாவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.