நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படத்தில் கமிட் ஆகி பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த 'நம்ப வீட்டு பிள்ளை' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, சிவா இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வந்த, 'ஹீரோ' திரைப்படம், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப் இயக்க உள்ள 'டாக்டர்' படத்தில் நடிக்க உள்ளார் சிவா. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும் நடிகர் வினை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக படக்குழுவினர், தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இவர் நடிகர் நானி நடித்த 'கேங் லீடர்' படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளே தயாராக இருக்கும் நிலையில், பிரியங்கா மோகனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனும், நம்ப வீட்டு பிள்ளை, ஹீரோ, மற்றும் டாக்டர் ஆகிய மூன்று படங்களிலுமே இளம் நடிகைகளுடனே ஜோடி போட்டி வருகிறார்.