சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 

 

இதையும் படிங்க: மீண்டும் திரையில் ஜோடி சேரப் போகும் சூர்யா - ஜோதிகா... சூப்பர் கதையை தயார் செய்து வைத்திருக்கும் இயக்குநர்!!

அதனால் படக்குழு மொத்தம் டாக்டர் பட புரோமோஷன் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதையடுத்து டாக்டர் படத்தின் பர்ஸ்ட் சிங் குறித்து படக்குழு காமெடி ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது போன்ற ஜாலியான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

சிவகார்த்திகேயன் தான் இந்த பாடலுக்கான வரிகளை எழுதி உள்ளார். 'இனிமேல் டிக் டாக் எல்லாம் Banமா.. நேரா டூயட் பாட வாயேன் மா..' என துவங்குகிறது இந்த பாடல். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகிய இருவரும் தான் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர். இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் பாடலின் மியூசிக் குறித்து வெளியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: புதிய காதலருடன் அமலா பால் பகிர்ந்த படுக்கையறை போட்டோ... செம்ம கிளாமரில் வேற லெவல் வைரல்...!

அதாவது இந்த பாடல் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா பாடலை ஸ்லோ மோஷனில் கேட்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதை வீடியோ மீம்ஸாக கிரியேட் செய்து சோசியல் மீடியாவில் சுத்தவிட்டுள்ளனர். 
இதற்கு முன்னதாக தர்பார் படத்தில் இடம் பெற்ற ரஜினிகாந்த் ஓபனிங் சாங்க்ஸ், மாஸ்டரில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி என புதிய பாடல்களுக்கு பழைய மெட்டை காப்பியடிப்பதாக அனிருத் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட காப்பி பேஸ்ட் புகார் எல்லாம் எப்போதும் நம்ம அட்லி மேல் தான் விழும், ஆனால் டியூனை காப்பியடிப்பதில் அதை எல்லாம் வேற லெவலுக்கு மிஞ்சிய அனிருத்தை எண்ணி சிவகார்த்திகேயன் செம்ம டென்ஷனில் இருக்காராம்.