sivakarthikeyan college video leeked

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே கோலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றதோடு, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர். இவருக்கு இளைஞர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகம் என கூறலாம்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம், தொடர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வேலைக்காரன் படத்தில் முதல் முறையாக தன்னுடைய நடிப்பை வேறு விதத்தில் பிரதிபலித்துள்ளார் சிவகார்த்திகேயன். 

இந்தப் படத்திற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன், அவருடைய கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறு பையனாக தோற்றமளிக்கும் சிவா... எப்படி சின்னத்திரையில் மிகவும் கலகலப்பாக இருப்பாரோ அதே போல அட்டகாசம் செய்துள்ளார்.

கைகட்டி மிகவும் பவ்யமாக இவர் நண்பர்களுடன் கொடுத்துள்ள போஸ் ... ரசிகர்களுக்கே இது சிவ கார்த்திகேயனா என்கிற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.