நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில், 'டாக்டர்' , 'அயலான்' என இரு படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். டாக்டர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். 

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கேங் லீடர்' பட புகழ் பிரியங்கா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் படப்பிடிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் தொடங்கியது.

மேலும் செய்திகள்: உலக அழகி என்றாலும்... மகளுக்கு அம்மா..! மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு!
 

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும், கத்திகள் ஆங்காங்கு சிதறுவது போலவும், நடிகர் சிவகார்த்திகேயன் நடுவே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போலவும், போஸ்டர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புதிய லுக்கில் கையில் ஒரு பேனாவை வைத்துள்ளார்.

டாக்டர் படத்தின் போஸ்ட்டர் இதோ...