Sivakarthikeyan at sensational shooting in Velaikkaran film

சிவகார்த்திகேயன் திரை உலக வாழ்கையில் குறுகிய காலத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் படம் என்றால் அது "வேலைக்காரன்" இந்த படத்தை அவரது நெருங்கிய நண்பர் R.D.ராஜா தயாரிக்க தனி ஒருவன் படத்துக்கு பின் மோகன் ராஜா இயக்கும் படம் "வேலைக்காரன்" இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்பட வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக "வேலைக்காரன்" படக்குழு மலேசியா செல்ல இருக்கின்றனராம். அங்கு நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்ததும் படக்குழு முடிவு செய்துள்ளனராம்.

இந்த படம் சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை மையக்கருவாக வைத்த உருவாக்கப்பட்டு வருகிறது. பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கான வியாபாரத்தை தயாரிப்பு குழு ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.