'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வந்த திரைப்படங்கள் மிகப்பெற்றிய வெற்றிப்பெற்றது. மேலும் இவர்களின் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 

சீமராஜா:

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ள திரைப்படம் 'சீமராஜா'. 

இந்தப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. பெரும்பாலான காட்சிகள் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பிற்காக கிராமத்தில் செட் அமைத்து படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். 

கிரிகெட் போட்டி:

தினமும் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் ஒரு கிரிகெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும் சூரி மற்றொரு அணியாகவும் விளையாடிய இந்த விளையாட்டில் 'சீமராஜா' படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டுள்ளனர். 

சமந்தா:

ஆனால் இந்த போட்டியில் சமந்தா கலந்துக்கொள்ளவில்லையாம் கிரிகெட் விளையாடுவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறிவிட அவர்களுடைய விளையாட்டை பார்த்து கைதட்டி ரசித்துள்ளார்.