சமீபத்தில் டான் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன் தற்போது கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து 'டான்' என்ற படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

கோவையில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது படக்குழுவினர் உள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் - சூரி இருவரும் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள்.  ஏற்கனவே 'கேடி பில்லா கில்லாடி ரங்கா',  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்', ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். எனவே இந்த படத்திலும் இவர்களது காமெடி சரவெடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'டான்'  படப்பிடிப்பு நேரம் போக, இரவில் சிறு குழந்தைகள் போல கிரிக்கெட் விளையாடி, சிக்சரா... பவுண்டரியா? என்கிற குழப்பத்தில் இவர்கள் விளையாட்டாக சண்டை போட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதில் இருந்து கோவையில் நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரத்தில் மிகவும் சந்தோஷமாக என்பதும் தெரிகிறது.

அந்த வீடியோ இதோ...