சமீப காலமாக பிறமொழிகளில் ஹிட் ஆன படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும், இது போன்ற வெற்றி படங்களில் நடிக்கவும்,  முன்னணி ஹீரோக்கள் பலரும் போட்டி போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெட்டே நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற படமான  ’Ala Vaikunthapurramuloo’என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய இரண்டு முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் வேறு யாரும் இல்லை நடிகர் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் தான். இவர்கள் இருவரே இந்த படத்தின் உரிமையை கைப்பற்றி, இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டலும், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகர்களாக இருக்கும் இவர்களில் யார், அல்லு அர்ஜுன் நடித்த படத்தின் உரிமையை கை பற்றி, இந்த படத்தில் கதாநாயகனாக மாறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.