இது இராணு வீரனின் முகம்;அமரன் அற்புதமான படைப்பு; தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள் - விமர்சனம்!
Amaran Twitter Review: மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறான அமரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு பாராட்டப்படுகிறது.
Amaran Twitter Review: பிக்பாஸ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் அமரன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமரன் திரைக்கு வந்துள்ளது. இதுவரையில் வயதானவர், நர்ஸ், போலீஸ் என்று பல கதாபாத்திரங்களில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக இராணு வீரராக அமரன் படத்தில் தோன்றியிருக்கிறார். இல்லை இல்லை ராணுவ வீரரனாகவே வாழ்ந்திருக்கிறார்.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படம் தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. சரித்திர நாயகன் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை மையப்படுத்தி அமரன் படம் திரைக்கு வந்திருக்கிறது.
அமரன் நாயகன் இது குறித்து தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இப்போது படத்தின் விமர்சனம் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க…தமிழ்நாட்டைத் தவிர மற்ற மொழிகளில் அதிகாலை 4 மணிக்கே வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
முதல் பாதி பிளாக்பஸ்டர் ஹிட், பயர் என்றெல்லாம் ரசிகர்கள் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்று அமரன் தீபாவளி. இதுவரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்களில் அமரன் சூப்பர்ஹிட் படமாக திரையரங்களில் பிரகாசமாக ஜொலிக்கிறது.
அமரன் படத்தின் மந்தமான காட்சிகள் என்று எதுவும் இல்லை. அருமையான தருணங்கள் ஏராளமாக உள்ளன. நேர்த்தியான மற்றும் டுவிஸ்ட் கொடுக்கும் முதல் பாதி. இடைவேளை வரையில் நேர்த்தியான மற்றும் வழக்கமான மசாலா காட்சிகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் கதைக்களத்துடன் ஒப்புக் கொண்டது. ஆனால் ஒரு போதும் ரசிகர்களை சலிப்படைய வைக்கவில்லை.
அமரன் படத்தின் முதல் பாதி உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. எஸ்கேயின் பயணம் பவர்புல்லாக இருக்கிறது. சாய் பல்லவியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இடைவேளை காட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இந்திய இராணுவத்தின் முகம். லவ்வர் பாயாகவும், ராணுவ வீரராகவும் ஜொலிக்கிறார். இடைவேளையில், பயங்கரவாதிகளை வீழ்த்திய பிறகு, "இது இராணுவத்தின் முகம்" என்று பயங்கரமான டயலாக் பேசுகிறார். அமரன் மிகவும் நல்லவர். சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதி சூப்பராக இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.