அப்போ இது பயோ பிக் தானா? முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிவகார்த்திகேயன் - யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?

Sivakarthikeyan Amaran : நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

Sivakarthikeyan Amaran movie is this a bio pic of major mukund varadarajan of indian army ans

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் அவர் முதல் முறையாக பிரபல ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் தான் "அமரன்". தற்போது அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. 

சிவகார்த்திகேயனை முற்றிலும் ஒரு ஆக்சன் ஹீரோவாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மாற்றி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அமரன் திரைப்படத்தில் "முகுந்த்" என்கின்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளார். ஆகவே இந்த திரைப்படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களுடைய ஒரு பயோபிக்காக இருக்கலாம் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மொக்கை வாங்கிய சந்திரமுகி 2.. கைகொடுத்த ஜிகர்தண்டா - ஓவர் குஷியில் ராகவா எடுத்த அடுத்த ஸ்டெப் என்ன தெரியுமா?

யார் இந்த முகுந்த் வரதராஜன்?

கேரளாவில் பிறந்து, சென்னையில் வசித்து வந்த இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெடிமெண்டில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் தான் முகுந்த் வரதராஜன். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் 3 பயங்கரவாதிகளை கொன்றதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "அசோக் சக்கரம்" விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இந்த விருதை பெற அவர் உயிரோடு இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகும். இந்திய ராணுவத்தில் இணைந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006 ஆம் ஆண்டு தான் ராஜ்புட் ரெஜிமெண்டில் லிப்டினனாக நியமிக்கப்பட்டார். பல்வேறு நிலைகளில் இந்திய ராணுவத்திற்காக, இந்திய மக்களுக்காக போராடிய அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலின் போது வீரமரணம் அடைந்தார். 

இந்நிலையில் அவருடைய அந்த வீர வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் "அமரன்" திரைப்படம் உருவாகி இருக்கிறது என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா... அதற்கு அவரது ரகசிய காதலனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios