சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என தெரியாமல் படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகவே... சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என தெரியாமல் படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகவே... சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர்.
'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 125 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் so baby பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 'டாக்டர்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். என்றும் பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய படக்குழுவினர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லாமலேயே இருந்து வருகிறது. பின்னர் திரையரங்கில் வெளியிடும் முயற்சியை படக்குழு கைவிட்டு விட்டு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியை எடுத்து. இதுகுறித்த விளம்பரங்களும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ஓடிடியில் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வரவே, திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், 'டாக்டர்' படத்தையும் திரையரங்கில் ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளது படக்குழு. இதுகுறித்து சமீபத்தில் 'டாக்டர்' படத்தை 'அக்டோபர்' மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 9 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
