சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்து, பின் வெள்ளித்திரையில் காமெடியன் என்கிற அந்தஸ்தை பெற்று தற்போது மக்கள் மனதில் கதாநாயகன் என்கிற முத்திரையை ஆழமாக பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தேர்வு செய்து நடித்த அத்தனை படங்களுமே ஹிட்டாக அமைத்தது. அதே போல இவரில் நடிப்பு தோரணையும் சில வசனங்களும்கு, படத்தில் வரும் பாடல்களும் குழந்தைகளை ஈர்த்தது.

இந்நிலையில் இவர் ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் இணைத்து நடித்தும் வருகிறார்.

இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தாலும் கொஞ்சம் நெகட்டி கலந்த கதாபாத்திரத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இதன் மூலம் முதல் முறையாக எப்படி நெகடிவ் ரோலில் சிவகார்த்திகேயன் மிரட்டுவார் என்பதை பார்க்க இப்போதே தயாராகிவிட்டனர் அவரது ரசிகர்கள் .