sivaji ganesan : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் நடிகர்களாக கலக்கி வரும் நிலையில், மேலும் ஒரு ஹீரோ களமிறங்க உள்ளாராம்.

நடிப்புக்கு பெயர்போனவர் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபுவும் சினிமாவில் நடிகராக ஜொலித்தார். இதையடுத்து பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார். சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் இரண்டாவது மகனான தர்சன் கணேசன் சினிமாவில் நடிக்க வருகிறார். ஏற்கனவே இவரது அண்ணன் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்ததே.


தர்சன் கணேசன் பூனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு, தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் நடிக்க வருகிறார். அவருக்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளதாம். விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்கள் என தெரிகிறது. 

தாத்தா போலவே தெருக் கூத்து நாடகங்களில் நடித்து, சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் தர்சனும் ஜொலிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிவாஜி வீட்டில் இருந்து மேலும் ஒரு வாரிசு ஹீரோவாக களமிறங்க உள்ளதை அறிந்த வலைதளவாசிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சார்பட்டா பரம்பரையை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஓடிடி-யில் வெளியிடும் பா.இரஞ்சித் - ரிலீஸ் தேதி அறிவிப்பு