சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள பூஜா தட்வால் காசநோய் தாக்கி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் கணவரும், குடும்பத்தினரும் மருத்துவமனையில் விட்டு விட்டு சென்று விட்டதால் பூஜா தட்வால் டி குடிக்கக் கூட பணம் இல்லாமல் தவித்தார்.

தனது நிலை குறித்து பேசி வீடியோ ஒன்றை பூஜா தட்வால் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார். அதில் 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்துவிட்டது என்றும், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன்.

ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என பேசியிருந்தார்.இந்த வீடியோவை பார்த்ததும் இந்தி நடிகர் ரவி கிஷன் அவருக்கு உதவ முன்வந்தார். தனது உதவியாளர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பண உதவி செய்துள்ளார்.

வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி சிவா!
பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“இன்று நேற்று நாளை” என்ற ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், தற்போது விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ‘கெட்-அப்’-பில் நடிக்கிறார். இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.