பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். 
சமூகத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தை முழுக்க கமர்ஷியல் பாணியில் இயக்குநர் ரத்னசிவா உருவாக்கியிருக்காராம். 

பிரபல தயாரிப்பாளர் ஐசசி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது. படத்தை கடந்த அக்டோபர் மாதமே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.


ஆனால், ஏதோ சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்கொண்டிருந்தது. இந்நிலையில், 'சீறு' படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டு, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. 
ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'ஹீரோ' படமும், டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு கூறி வருகிறது.

 தற்போது, ஜீவாவின் 'சீறு' படமும் அதேநாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'விஸ்வாசம்' - ரஜினியின் 'பேட்ட' மற்றும் தீபாவளிக்கு விஜய்யின் 'பிகில்' - கார்த்தியின் 'கைதி' என மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ஹிட்டடித்தன. அந்த வெற்றிப்படங்களின் வரிசையில், சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' - ஜீவாவின் 'சீறு' ஆகிய படங்களும் இணையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.