சென்னையில் கடந்த 18 ஆம் தேதி தனது வாக்களர் அடையான அட்டையுடன் நடிகர் சிவ கார்த்திகேயன் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதனால ஏமாற்றம் அடைந்த சிவ  கார்த்திகேயன், இது குறித்து அந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 

ஒரு கட்டத்தில் தேர்தல் தேர்தல் அதிகாரிகள் சிவ கார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்தனர். ஆனால் சாதாரண மக்களுக்கு இது போல் வாய்ப்பளிக்க முடியுமா? என பொது மக்கள் கேள்வி எழுப்பியுருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை அதிகாலி சத்ய பிலத சாகு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பட்டியலில் பெயர் இல்லாமலேயே அவர் தவறுதலாக வாக்களித்ததாக அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். இதில், சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்டால், அவரை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சரியான கேள்விதான். அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதைப் பார்த்து அவரை உள்ளே அனுப்பி இருக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இதை கவனிக்காமல் அனுமதித்திருக்கலாம்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் அவர் ஓட்டு போட்டுள்ளார். அந்த ஓட்டு கழிக்கப்படுமா?, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலை வந்தால் என்ன செய்வது? என்று கேட்டால், அதுபற்றி பின்னர் பார்க்கலாம். அது கள்ள ஓட்டாக என்று எடுத்துக்கொள்ளலாமா என்றால், இதில் தவறு செய்தவர்கள் யார்-யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது?, எப்போது நீக்கப்பட்டது? என்ற விளக்கத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன். அவர் வேறு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாரா? என்பதுபற்றி தெரியவில்லை என சத்ய பிரத சாகு தெரிவித்தார்.