siumbu gave a gift for ilaiiyaraja birthday

சிம்புவின் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தின் முதல் பாகம் தயாராகிறது.

படமும் ரமலான் சிறப்பாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, முதல் பாகத்தில் தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

இந்த நிலையில் வரும் ஜுன் 2-ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் வருவதால் இளையராஜா பாடியிருக்கும் “ரோட்டுல வண்டி ஓடுது” என்ற பாடலை அவரது பிறந்தநாளுக்கு வெளியிட முடிவு எடுத்துள்ளனர் படக்குழு.

இந்த தகவலை சிம்பு மற்றும் இயக்குனர் ஆதிக் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.