தமிழகத்தின் அரசியல் நிலை நாளுக்கு நாள் மிக மோசமாக போகிறதோ...! என பலருக்கு தோன்றி விட்டது. அதற்கு முக்கிய காரணம் நம் அரசியல் தலைவர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.

ஒரு வழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முடிந்தபின் முதலமைச்சர் யார் என முடிவு தெரிந்து விடும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மேலும் பல குழப்பங்கள் எழுந்துள்ளது. மேலும் சபாநாயகர் இருக்கையையே ஒரு சில கட்சியினர் முற்றுகையிட்டு மைக், டேபிள் ஆகியவற்றை உடைத்துள்ளனர்.

அதே போல , காலை முதல் தற்போது வரை சட்டமன்றத்தில் அடிதடி மட்டுமே நடந்து வருகின்றது, இதை பார்த்த சித்தார்த் தன் டுவிட்டர் பக்கத்தில் மனம் நொந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்...

அவர் கூறுகையில் நாம் என்ன குழந்தைகளை இதை பார்த்துக்கொண்டு இருப்பதற்கு , சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டும் பார்த்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும். தமிழ் நாட்டிற்கே இது பற்றிய புரிதல் வேண்டும்... அப்படி இல்லை என்றால் அது வெட்கப்படக்கூடிய ஜனநாயகம் என கூறியுள்ளார்.

 'மேலும் இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமா போகட்டும், இப்படி தான் சில காட்சிகள் நினைக்கின்றதாகவும், என சில கட்சியினரை ட்விட்டரில் தாக்கியுள்ளர்.