sitharth tweet for nirbaya case
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் நடந்த சம்பவம் அனைவர் மனதையும் உலுக்கியது. அது தான் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த விதத்தில் நடிகர் சித்தார்த் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது, திரையரங்குகளில் படத்துக்கு முன்பாக தேசிய கீதத்தை இசைப்பதைக் காட்டிலும் பாலியல் பலாத்காரர்களுக்கு மரண தண்டனை என்று காட்டுவது அதிக தேசப்பற்றுடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
