Asianet News TamilAsianet News Tamil

ரஜினிக்கே ரெட் கார்டு போட்ட பிரபல விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்...

பழம்பெரும் விநியோகஸ்தரும் அந்த விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 16 முறை தலைவர் பதவி வகித்தவருமான சிந்தாமணி முருகேசன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
 

sinthamanai murugesan passes away
Author
Chennai, First Published Jul 19, 2019, 10:40 AM IST

பழம்பெரும் விநியோகஸ்தரும் அந்த விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 16 முறை தலைவர் பதவி வகித்தவருமான சிந்தாமணி முருகேசன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

இன்று காலமாகி விட்டார்
இந்த சிந்தாமணியார் குறித்து இளையதலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! 

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படத்தின் மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் நுழைந்தவர் முருகேசன் .அப்படம் அன்றைய காலகட்டத்தில் வெற்றிப் படமானதால் அப்படத்தினசென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக 16 முறை பொறுப்பு வகித்தவர்.

இவர் தலைவராக இருந்த காலங்களில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் தெறிக்கவிட்டவர்

சாதாரணமான விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்.ஆனால் தன் சங்கத்தின் முடிவுகளை தமிழ் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த விநியோகஸ்தர்கள் சங்கங்களை கடைப்பிடிக்க வைத்த சூத்ரதாரி

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக மட்டுமே இருந்தவர் தமிழ் சினிமாவில் அனைத்தையும் தீர்மானிக்கும் தனித் தலைமையாக தன்னை வளர்த்துக் கொண்டவர் 

ரஜினி நடித்த 'உழைப்பாளி' படத்துக்கு ரெட் கார்ட் போட்டவர்.  சம்பளத்துக்கு பதிலாக உழைப்பாளி படத்தின் NSC உரிமையை வாங்கிய ரஜினிகாந்த்துக்கு எதிராகவே வியாபார ரீதியாக அப்படத்துக்குத் தடை விதித்தார் சிந்தாமணி முருகேசன். 

இதற்கு எதிராக கமல் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் அறிக்கைப் போர் நடத்தினார்கள்..

சமாதான பேச்சு வார்த்தை எல்லாம் பிசுபிசுத்து போனது. அதனால்  அந்த ரெட்டை சமாளிக்க சென்னை அண்ணாசாலையில் உள்ள குறுகலான மீரான்சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் நேரில் வந்து சென்றது இந்திய சினிமா வியாபார உலகம் அது வரை சந்திக்காத நிகழ்வு. ஊடகங்களில் இது முதல் பக்க செய்தி ஆனது. குழந்தை மனம் கொண்டவர்.பழகுவதற்கு இனியவர்.. பத்திரிகையாளர் எப்போது சென்றாலும் தாமதம் செய்யாமல் சந்திக்க கூடியவர்  சிந்தாமணி முருகேசன் . [தகவல் உதவி...ராமானுஜம்]

Follow Us:
Download App:
  • android
  • ios