பிரபல பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கணவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்த செய்தி திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 10,000 பாடல்கள் பாடி, மக்கள் மத்தியில் நீங்கா  இடம் பிடித்தவர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான வாணி ஜெயராம் கலைவாணி என்ற இயற்பெயர் கொண்டவர். இவர்  தனது பெயரான கலைவாணியுடன், கணவர் பெயரான ஜெயராம் பெயரை சேர்த்து வாணி ஜெயராம் என  வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர்க்கு மேலும் புகழை தேடி தந்தது.தமிழகத்தில் இருந்து திருமணத்திற்கு பின்,மும்பை சென்று செட்டல் ஆனவர், பின்னர் மீண்டும் தமிழகத்திற்கு வந்தார். 

இந்நிலையில், வாணி ஜெயராமனின் கணவர், உடல் நலக் குறைவால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்தார். இந்நலையில் இன்று, வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.