singer susithra planning to fly london for treatment

மனநல சிகிச்சைக்காக லண்டன் பறக்கும் சுசித்ரா..! திரையுலகமே அதிர்ச்சி .....

பிரபல பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து , பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி ஒட்டு மொத்த மக்களையும் முகம் சுழிக்க வைத்தது . இந்நிலையில் மேலும் பல பிரபலங்களின் வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், ட்வீட் கொடுத்திருந்தார் .

இந்நிலையில், சுசித்ரா மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார் . இதனை தொடர்ந்து தற்போது சுசித்ரா அவரது கணவரை விவாகரத்து செய்ய போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார். ஆனால் சுசித்ராவின் கணவர் இதற்கு மறுப்பு தெரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், சுசித்ரா மன நல சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது . அதே வேளையில் அவர் எப்போது வெளிநாடு செல்ல உள்ளார் என விவரம் திட்டவட்டமாக தெரியவில்லை .