மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக தனது சகோதரியால் புகார் கொடுக்கப்பட்டு அடையாறு நட்சத்திர ஓட்டலில் கண்டு பிடிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா தனக்கு சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் தற்கொலை செய்துகொள்வேன் என்கிற அளவுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது சுசி லீக்ஸ் பதிவுகளின் நடிகர் நடிகைகளின் அந்தரங்க பார்ட்டி சமாச்சாரங்களை வெளியிடத் துவங்கியதிலிருந்தே பல மர்மமான சிக்கல்களை சந்தித்து வருகிறார் பாடகி சுசித்ரா. இடையில் அவருக்கு மனநலம் சரியில்லை என்ற செய்தி பரப்பப்பட்டது. அவருடைய சில நடவடிக்கைகளை அப்படியே இருந்த வகையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு, தனது பாதுகாப்பிலிருந்த சுசித்ராவைக் காணவில்லை என்று அவரது சகோதரி போலீஸில் புகார் கொடுக்கவே அவர் அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவரை அங்கிருந்த மீட்ட சுசித்ராவின் சகோதரியும் அவரது கணவரும் மீண்டும் ஒரு மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகத் தெரிகிறது.

இச்சம்பவங்கள் குறித்து இன்று காலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுசித்ரா,...நான் தொலைந்து போகவோ, தற்கொலைக்கு முயலவோ இல்லை. என் சகோதரி கூறியிருப்பதுபோல் எதுவும் நடக்கவில்லை. நான் பார்க் ஷெரடன் ஓட்டலில் தங்கியிருந்தது தெரிந்து அழைத்துப்போனார்கள் அவ்வளவே. இப்போது நான் ஒரு மன நல மருத்துவரிடம் [கீழ்ப்பாக்கத்தில் அல்ல] சிகிச்சை பெற்று வருகிறேன். அவர் நான் நலமாக இருப்பதாகவே கூறுகிறார்.சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். மறுபடியும் சொல்கிறேன். என்னை நம்புங்கள் நான் தற்கொலை செய்துகொள்ளவோ அல்லது மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவே மாட்டேன்’என்கிறார்.