பல மர்மச் செய்திகளின் சொந்தக்காரரும் பிரபல பின்னணிப் பாடகியுமான சுசித்ரா மீண்டும் ஒரு பரபரப்பான செய்தியுடன் வெளியே நடமாடத் துவங்கியுள்ளார். தன்னைச் சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று நடப்பதாகவும் யாரோ தன்னைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்றும் அவர் கூறிவருவதாகத் தெரிகிறது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ‘சுசி லீக்ஸ்’ செய்திகள் மூலம் பரபரப்படைந்தவர் பாடகி சுசித்ரா. நட்சத்திரங்களின் பாலியல் அந்தரங்கங்களை வெளியிட்டு சினிமாவுலகுக்குள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார் அவர். திரையுலக பிரபலங்களின் பார்ட்டிகள் அங்கு அவர்கள் அடிக்கும் லூட்டிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து அவரது சமூக வலைதல அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் தன் தாய்வீட்டிலிருந்து வெளியேறி சகோதரி சுனிதா வீட்டில் வசித்துவரும் சுசித்ராவை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என்றும் இது தொடர்பாக சுனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசித்ராவைத் தேடி வந்த போலீஸார் அவரை நட்சத்திர விடுதியிலிருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை தற்போது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகத் தகவல். இந்நிலையில் ஒரு ஊடகத்துடன் பேசிய சுசித்ரா “நான் காணாமல் போகவில்லை…” என்றார். “சில மணிநேரங்கள் தொடர்பு எல்லைக்குள் இல்லாததால் தன்னைக் காணாமல் போனதாக  சகோதரி போலீஸில் புகார் கொடுத்ததாகவும், தற்போது மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.அத்துடன் தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற விடாமல்  யாரோ தொடர்ந்து காவல் கப்பதாகவும், இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சுசித்ரா படங்களில் பாடல்கள் எதுவும் பாடவில்லை.