Asianet News TamilAsianet News Tamil

’தென்னிந்திய நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுக்க பிரதமர் மோடி விரும்பவில்லை’...பாடகர் எஸ்.பி.பி. சொல்லும் சீக்ரெட்...

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் இல்லத்தில் காந்தி அடிகளின் 150 வது நினைவுநாள் அஞ்சலிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் பெரும்பாலும் வட இந்திய நட்சத்திரங்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தனர். ஆனால் அப்படி அனுமதிக்கப்பட்டவர்களும் மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக பாடகர் எஸ்.பி.பி.குறிப்பிட்டுள்ளார்.

singer spb's facebook status about pm modi
Author
Chennai, First Published Nov 2, 2019, 5:16 PM IST

பிரதமர் மோடி வட இந்திய நட்சத்திரங்களுடன் காட்டும் நெருக்கத்தை தென்னிந்திய நடசத்திரங்களிடம் எப்போதுமே காட்டுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது முகநூல் பதிவில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.singer spb's facebook status about pm modi

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் இல்லத்தில் காந்தி அடிகளின் 150 வது நினைவுநாள் அஞ்சலிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் பெரும்பாலும் வட இந்திய நட்சத்திரங்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தனர். ஆனால் அப்படி அனுமதிக்கப்பட்டவர்களும் மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக பாடகர் எஸ்.பி.பி.குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அவரது முகநூல் பதிவில்,....  "ஈநாடு நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவரால்தான் அக்டோபர் 29-ம் தேதி பிரதமர் மோடி தனது இல்லத்தில் அளித்த விருந்தில் நான் கலந்து கொள்ள இயன்றது. பிரதமர் இல்லத்துக்குள் நுழையும் முன் எங்கள் அனைவரின் செல்போனும் வாங்கிவைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் அதற்கான டோக்கனை அளித்து உள்ளே அனுப்பினர். singer spb's facebook status about pm modi

ஆனால் நான் உள்ளே சென்று பார்த்தபோது எனக்கு ஒரே அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் அங்கிருந்த பிரபலங்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். சில சம்பவங்கள் நம்மை வாயடைக்க வைக்கும். அப்படித்தான் இதுவும்" என்று தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி. இதன் மூலம் வட இந்திய நட்சத்திரங்களுடன் மட்டுமே பிரதமர் செல்ஃபி எடுக்கவிரும்பியதாக எஸ்.பி.பி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios