பூவே உனக்காக முதல்.. அழகிய தமிழ் மகன் வரை.. தளபதிக்கு 3 ஹிட் பாடல்கள் கொடுத்த சிங்கர் - யார் அந்த அஸ்லாம்?

Singer Mohammed Aslam : தமிழ் திரையுலகில் விரைவில் தனது திரைப்பயணத்தை முடிக்கவுள்ளார் தளபதி விஜய். இந்நிலையில் அவருக்கு 3 சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய ஒரு பாடகர் குறித்து இப்பொது பார்க்கலாம்.

Singer Mohammed aslam who gave 3 super hit songs for thalapathy vijay ans

தனது திரையுலக பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாடல்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகர் தான் தளபதி விஜய். அவரே ஒரு சிறந்த பாடகர் என்ற பொழுதும், அவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் பாடல்கள் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் அவருக்கு 3 சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த முகமது அஸ்லாம் குறித்து இப்பொழுது காணலாம். 

பெங்களுருவில் பிறந்த முகமது அஸ்லாம் அவர்களுக்கு தமிழில் முதல் வாய்ப்பு கொடுத்தது இசையமைப்பாளர் சிற்பி அவர்கள் தான். கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான "நாட்டாமை" திரைப்படத்தில் வந்த "நான் உறவுக்காரன்" என்கின்ற பாடலை பாடி தமிழ் திரை உலகில் தனது பயணத்தை துவங்கினார், இவருடைய தனித்துவமான குரல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

சண்முகத்தை ஏமாற்றும் வைகுண்டம்.. பாண்டியம்மா காலை பதம் பார்த்த இசக்கி - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட்

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில் எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் வெளியான "பூவே உனக்காக" படத்தில் வரும் "ஓ பியாரி பாணி பூரி பம்பாய் காரி" என்கின்ற பாடலை பாடி மிகப்பெரிய ஹிட் பாடல் ஒன்றை தளபதி விஜய் அவர்களுக்கு அவர் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வித்யாசாகர், ஏ.ஆர் ரகுமான் என்று பல முன்னணி இசை அமைப்பாளர் உங்களுடைய இசையில் பாடி வந்தார் முகமது அஸ்லாம். 

இந்த சூழலில் அவருக்கு மெகா ஹிட்டான பாடல் தான் 1997ம் ஆண்டு "லவ் டுடே" படத்தில் அறிமுக இசையமைப்பாளர் சிவா இசையில் ஒலித்த "ஏன் பெண்ணென்று பிறந்தாயோ" என்கின்ற பாடல். இன்றளவும் அந்த பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு என்றால் அது முறையல்ல. தல அஜித் அவர்களுக்கும் சில பாடல்களை பாடியுள்ள முஹம்மது அஸ்லாம் வர்கள் இறுதியாக தளபதி விஜய் அவர்களுக்கு "அழகிய தமிழ் மகன்" திரைப்படத்தில் வந்த "பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்" என்கின்ற பாடலை பாடியிருப்பார். 

இப்படி தளபதி விஜய் அவர்களுக்கு அவர் பாடிய மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹன்சிகா மோத்வானியா இது? டோடல் லுக்கை மாற்றி இரட்டை வேடத்தில் கலக்க வரும் நாயகி - காந்தாரி கம்மிங் சூன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios