ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா, புர்கா அணிந்து வெளியில் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு முறை, சர்ச்சைகள் வந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை துவங்கியுள்ளது.

முன்னணி எழுத்தாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கதிஜா புர்கா அணிவது குறித்து விமர்சனம் செய்ததற்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்த கதீஜா...  "நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கவலைப்படுவது பெண்கள் அணிய விரும்பும் உடையை பற்றி தான். ஒவ்வொருமுறை இதைப் பற்றி பேச்சு வரும் போதும், நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். நான் எடுத்த முடிவை நினைத்து வருத்தப்படமாட்டேன். நான் செய்வதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்" என்று கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் கதீஜாவின் இக்கருத்துக்கு ஆதரவாக பல திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்! காதலரை கரம்பிடிக்க போகும் அமலாபால்!

அந்த வகையில் பிரபல சர்ச்சை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். ’மிகவும் சிறிய உடைகளை அணியும் பெண்களை கண்டித்து அசிங்கப்படுத்துவது போல் தான் புர்கா அணியும் பெண்களை விமர்சனம் செய்வது என்றும் புர்கா அணிவதும், அணியாததும் கதீஜாவின் சொந்த விருப்பம் என தெரிவித்தார்.

சின்மயி இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், சின்மயி ‘தாலி' அணித்துள்ளது மற்றும் குங்குமம் வைத்துக்கொள்வது குறித்தும்  சர்ச்சைக்குரிய ஒரு கேள்வி எழுப்பினர். அதற்கு சின்மயி ’தாலி அணிய சொல்லி எனது கணவரோ அல்லது அவரின் குடும்பத்தினரோ என்னை   கட்டாயப்படுத்தவில்லை. நானே விருப்பப்பட்டு தான் தாலி அணிகிறேன். தாலி  அணிவதும், அணியாமல் போவதும்  என்னுடைய சாய்ஸ்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்

சின்மயியின் இந்த பதிலடி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.