‘அம்மணி சின்மயி தீபாவளி பண்டிகையை நல்லபடியாகக் கொண்டாட ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுங்க’ என்று பத்திரிகையாளர்களை நாம் கெஞ்சிக்கேட்டுக்கொண்ட நிலையில், ‘மிடியாது நான் நடுத்தெருவுக்கு வந்து எவன் கூடயாவது வம்பு இழுத்துக்கிட்டேதான் இருப்பேன்’ என்று முரண்டு பிடிக்கிறார் பாடாவதி பாடகி சின்மயி.

கவிஞர் வைரமுத்துவுக்கும் சின்மயிக்குமான பிரச்சினைகள் போரடிக்குமளவுக்கு பேசி முடிக்கப்பட்டதால் சமீபகாலமாக மீடியாக்கள் இவரை பெரிதாய்ப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அப்பிடியெல்லாம் என்னை விட்டுட்டுப் போயிடமுடியாது என்பது போலவே சமீப சில தினங்களாய் பத்திரிகையாளர்களிடம் ஓவராய் ஒரண்டை இழுக்கிறார் சின்மயி.

நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவு ஒன்றில்... உன்மையைச் சொல்லப்போனால் என்னுடைய பிரச்சினை குறித்து வட இந்திய ஊடகங்கள்தான் எழுதின. அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தால்தான் இங்கேயும் செய்திகள் வந்தன. இல்லாவிட்டால் இங்கே அனைத்தையும் மூடி மறைத்திருப்பார்கள். ...இங்கே ‘கவர்’தான் பேசும்போல. உண்மை பேசவே பேசாது’என்கிறார் சின்மயி.