பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தான் பாடகி சின்மயி, மேலும் இவருக்கு அம்மா இல்லை என்கிற விஷயத்தை அறிந்ததும் தான் ஓவியாவை தத்து எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். 

இப்படி ஓவியாவிற்கு ஆதரவு கொடுத்து வந்த இவர், தற்போது இவருடைய ரசிகர்களை பார்த்து வெக்கமாக இல்லையா உங்களுக்கு...? என அசிங்கப்படுத்துவது போல் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இப்படி இவர் கோவப்பட காரணம்... கடந்து மூன்று வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, ஜூலியை தற்போது வரை பலர் மீம்ஸ், போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவருடைய வீட்டின் அருகே சென்று ஓவியாவுக்கு ஆதரவாக பேசியும், ஓவியா வெளியேற இவரும் ஒரு காரணம் என்று கூறி பிரச்சனை பண்ணியதாக தெரிகிறது.

இதற்கு தான் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் சின்மயி, மேலும் இது குறித்து அவர் கூறுகையில் சாதாரண ஒரு ரியாலிட்டி ஷோ விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அரசியல் ஈடுபாடுகளில் காட்டி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண்ணின் வீட்டிற்கே சென்று பிரச்சனை செய்துள்ளீர்களே...! வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்மயியின் இந்த கருத்திற்கு பலர் தங்களுடைய ஆதரவை ட்விட்டரில் தெரிவித்து  வருகின்றனர்.