டப்பிங் யூனியன் ஊழல் தொடர்பாக விசாரணை...நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த பாடகி சின்மயி...
டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
’இப்போதாவது நடிகர் ராதாரவியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதில் மகிழ்ச்சி. உறுப்பினர்களின் பணத்தை சூறையாடிவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு நன்றி’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பாடகி சின்மயி.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததை ஒட்டி டப்பின் யூனியனின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சின்மயி அந்த யூனியனில் ஊழல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார் கூறிவந்தார். இந்நிலையில் தென்னந்திய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சந்தா வசூலிக்கப்படுவதாகவும், சங்க நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தொழிற்சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சங்க தலைவர் ராதாரவிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இச்செய்தியை மிகுந்த உற்சாகத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி, நட்வடிக்கைக்கு முன் வந்த நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.