"எனக்கு இரண்டாவது முறை நடந்த கல்யாணம்".. ஓப்பனாக சொன்ன நடிகர் ஆர்.ஜே. பாலாஜி - யாரை மணந்தார் தெரியுமா?

Actor RJ Balaji : நடிகை ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Singapore Saloon Movie Success Actor RJ Balaji shared a interesting story about his marriage ans

பண்பலை தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்கள் அதன்பிறகு திரைத்துறையில் தனக்கு கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை நேர்த்தியாக பயன்படுத்தி அதன் பிறகு காமெடி நடிகராக உருவெடுத்தார். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" என்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு LKG என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தனித்து நாயகனாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான "மூக்குத்தி அம்மன்" உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

"இது 18 வருட காத்திருப்பு.. ப்ளூ ஸ்டார் படம் கொடுத்த அங்கீகாரம்" - வெற்றிவிழா நிகழ்ச்சியில் எமோஷனலான பிருத்வி!

இந்நிலையில் அவருடைய சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிய நல்ல வசூலை பெற்ற நிலையில் இன்று அந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கள் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு ஒரு தங்க சங்கிலியை பரிசளித்தார். 

இந்த சூழலில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆர்.ஜே பாலாஜி அவர்கள் ஒரு பேட்டியில் முன்பு பேசும்பொழுது தனக்கு இரண்டு முறை திருமணம் நடந்ததாக கூறி அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாகினார். இது குறித்து பேசி அவர் "எனக்கு 21 வயது இருக்கும் பொழுது நான் என் காதலியை கரம்பிடிக்க என் வீட்டார் விருப்பத்தை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டேன்".

Singapore Saloon Movie Success Actor RJ Balaji shared a interesting story about his marriage ans

ரஜினி சொன்ன அந்த குட்டிக்கதை.. அதன் அடிப்படையில் புதிய நிறுவனத்தை துவங்கிய ஜீவா - Deaf Frogs Records அப்டேட்!

"அப்பொழுது எனக்கு சரியான வேலை கூட கிடையாது, பண்பலை தொகுப்பாளராக வேலையில் சேர்வதற்கு வெறும் கால் லட்டர் மட்டுமே வைத்திருந்தேன். ஆனால் எனக்கு பதிவு திருமணமானதை அறிந்து கொண்ட எனது பெற்றோர், நல்ல நாள் பார்த்து எனக்கு மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து வைத்தனர்". இதைத்தான் எனக்கு இரண்டு முறை திருமணம் நடந்திருக்கிறது என்று கூறினேன். எனக்கு ஒரே ஒரு மனைவி தான் என்று கூறி அரங்கத்தினரை சிரிப்பு அலையில் ஆழ்த்தினார் ஆர்.ஜே பாலாஜி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios