நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்து வருகிறார், இயக்குனர் ஹரி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இது வரை இந்த படத்தை பற்றி எந்த ராகசியத்தையும் வெளியிடாத சூர்யா முதல் முறையாக இந்த படம் பற்றி வாய் திறந்துள்ளார்.

இந்த படத்தில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதலமைச்சர்களாக இருந்த போது நிகழ்த்த உண்மை சம்பவம் பற்றி படமாக்க பட்டுள்ளதாக கூறியுள்ளார் .

மேலும் மற்ற 2 பாகங்களை விட இந்த பாகங்கத்தில் கூடுதலாக பல விஷயங்களை சேர்த்துள்ளதாகவும், இந்த படத்திற்காக அதிகமாக உழைத்துள்ளதாக தெரிவித்தார் சூர்யா.