Asianet News TamilAsianet News Tamil

காலாவதியான விசா...சூர்யா பட வில்லன் டெல்லி விமான நிலையத்தில் கைது...

தமிழில் சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின்  3ம் பாகமாக வந்த ’எஸ் 3’ படத்தில்  மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஓலா ஜேசன். இந்தியில் ஆமீர்கான் நடித்த டங்கல் மற்றும் கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்  போன்ற படங் களில் நடித்திருக்கிறார். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், சூப்பர் ஸ்டோரி, கிங் ஆப் மை வில்லேஜ் உட்பட சில நைஜீரிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

singam 3 movie villain ola jesan arrested
Author
Delhi, First Published Oct 26, 2019, 2:34 PM IST

விசா காலம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்தியாவில் சுற்றித்திரிந்த ‘சிங்கம் 3’ பட நடித்த நைஜீரிய நடிகர் ஓலா ஜேசன் டெல்லி விமான நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களைக் கூறியதாலவர் கைது செய்யப்பட்டுள்ளார்.singam 3 movie villain ola jesan arrested

தமிழில் சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின்  3ம் பாகமாக வந்த ’எஸ் 3’ படத்தில்  மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஓலா ஜேசன். இந்தியில் ஆமீர்கான் நடித்த டங்கல் மற்றும் கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்  போன்ற படங் களில் நடித்திருக்கிறார். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், சூப்பர் ஸ்டோரி, கிங் ஆப் மை வில்லேஜ் உட்பட சில நைஜீரிய படங்களில் நடித்து பிரபலமானவர்.singam 3 movie villain ola jesan arrested

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஓலா ஜேசன் இன்று அதிகாலை சுற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார். அவரிடம் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட் இருந்தது. பாஸ்போர்ட்டை பார்த்தபோது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரியவந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியிருந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து உளவுத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜேசனை அழைத்து விசாரணை நடத்தினர். உடமைகளையும் ஆய்வு செய்தனர். விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட்டை அவர் வைத்து இருந்தார். பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டிலேயே முடிந்து இருந்தது.

இதைத் தொடர்ந்து உளவுத்துறையினர் அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தியபோது தொடர்ந்து ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே அவர் கூறியுள்ளார். எனவே அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios