simran parthicipate in big boss 2
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, அர்ஜுன், விஜயகாந்த் என பலருக்கு ஜோடியாக நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இடையழகி சிம்ரம். 
இவருடைய அழகிற்கும், நடனத்திற்கும் தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது அழுத்தமான கதாப்பாத்திரம் கிடைக்காததால், சின்ன திரையில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
மேலும் அடுத்ததாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள, திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள 'பிக்பாஸ்2' நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் போட்டியாளராக கலந்துக்கொள்ள உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது சிம்ரன் பிக் பாஸ் கன்ஃபேஷன் ரூமில் அமர்ந்திருக்கும் படி புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
