சிம்ரன் உங்களுக்கு என்ன ஆச்சி? பார்த்ததுமே ஷாக்கான ரசிகர்கள்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 15, Apr 2019, 5:41 PM IST
simran new hair style, shocking for fans
Highlights

90 களில் பல கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகை சிம்ரனின் தற்போதைய புது கெட்டப்பை பார்த்து, ரசிகர்கள் அப்படியே..  ஷாக் ஆகிட்டாங்கன்னா... பாருங்களேன். 
 

90 களில் பல கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகை சிம்ரனின் தற்போதைய புது கெட்டப்பை பார்த்து, ரசிகர்கள் அப்படியே..  ஷாக் ஆகிட்டாங்கன்னா... பாருங்களேன். 

விஜய், சூர்யா, கமல், அர்ஜுன் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும், ரஜினியுடன் இணைந்து நடிக்க முடிய வில்லையே என வருத்தப்பட்டவர் நடிகர் சிம்ரன்.

இவருடைய ஆசையை நிறைவேற்றும் விதத்தில், இதுவரை ரஜினி படங்களில் மட்டும் நடிக்காமல் இருந்த சிம்ரனையும், த்ரிஷாவையும் ஒரே படத்தில் ரஜினியுடன் நடிக்க வைத்து, அவர்களின் ஆசையை பூர்த்தி செய்தார் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். 

வெயிட்டான, ரீ-என்ட்ரி படத்திற்கு காத்திருந்த சிம்ரனுக்கு இந்த படம் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். இவருடைய கதாப்பாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என விடாப்பிடியாக இருக்கிறார் சிம்ரன்.

தற்போது, மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்... சிம்ரன் உங்களுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி? என பல கேள்விகளை கேட்டு வருவதோடு பார்த்ததுமே ஷாக்காகி விட்டதாக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ:
 


 

View this post on Instagram

😉😉😉😉

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on Apr 12, 2019 at 5:08am PDT

loader