Simbus song went to gi prakash movie
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘வடசென்னை’.
இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக பேசப்பட்டவர் நடிகர் சிம்புதான். மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஜி.வி. பிரகாஷ்.
சில பிரச்சனைகளால் சிம்பு இடத்தை தனுஷ் நிரப்பிக் கொண்டார். அதேபோன்று, ஜி.வி. பிரகாஷ் இடத்தை சந்தோஷ் நாராயணன் ஆக்கிரமித்துவிட்டார்.
ஜி.வி. பிரகாஷ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனேயே, சிம்புவுக்காக ‘உருட்டு கண்ணால’ என்ற பாடலை உருவாக்கிவிட்டார்.
இந்தப் பாடலை ஏகாதசி எழுதியுள்ளார். இந்தப் பாடலை, சந்தோஷ் ஹரிஹரன், மோனிஷா, மாளவிகா ஆகியோர் பாடியுள்ளனர்.
ஆனால், தற்போது தனுஷ் நடிப்பதாலும், தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் ஏற்கனவே ஆகாது என்பதாலும், அந்தப் பாடலை தான் நடிக்கும் ‘செம’ படத்தில் பயன்படுத்தி கொண்டாராம் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.
